உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஆசிரியரும் மாணவரும் நேரம் : மாலை ஐந்து மணி. இடம் : பூங்கா. (மாணவர்கள் பூங்காவில் ஆசிரியரின் வரவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் வருகின்றார்.) மாணவர்கள் : (எழுந்து நின்று) வணக்கம் ஐயா! ஆசிரியர் : (புன்முறுவலுடன்) மாணவர்கள் எல்லோரும் வந்துவிட்டீர்களா? (எண்ணிப் பார்க்கின்றார்.1 மாணவர்கள் : எல்லோரும் வந்திருக்கின்றோம், ஐயா! ஆசிரியர் : உட்காருங்கள். சென்ற வாரம் படித்த குறட் பாக்கள் எல்லாம் நினைவில் இருக்கின்றனவா? எங்கே ஒரு குறட்பா சொல்லுங்கள். சுந்தரம் : நான் சொல்லுகிறேன் ஐயா! ' ஆசிரியர் : சுந்தரம் கெட்டிக்காரன், மற்றவர்கள் எல்லாம் உட்காருங்கள்; சுந்தரம் சொல்லட்டும்! சுந்தரம் : கற்க கசடறக் கற்பவை: கற்றபின் நிற்க அதற்குத் தக. ஆசிரியர் : சரியாகச் சொல்லிவிட்டாயே; உட்கார்ந்து கொள். வேலு! நீ அக்குறட்பாவின் பொருளைச் சொல்லு! வேலன் : ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் குற்றமற நன்ருகக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபிறகு அந்த நூல்களில் சொல்லியபடி நல்ல வழியிலே நடந்து கொள்ள வேண்டும்.