உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

ஆசிரியர் : வேலு சரியாகச் சொல்லிவிட்டானே! எல்லோ ருக்கும் இந்த அர்த்தம் தெரியுமா? மாணவர்கள் : (எல்லோரும்) தெரியும் ஐயா! ஆசிரியர் : கற்க கசடற என்பதற்கு என்ன பொருள்? மணி நீ சொல் பார்ப்போம். மணி : குற்றமறக் கற்க வேண்டும். ஆசிரியர் : நிற்க அதற்குத்தக' என்பதற்கு என்ன பொருள்? மாணிக்கம் நீ சொல்! மாணிக்கம் : கற்றபிறகு அந்த நூல்களில் சொல்லியபடி நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியர் : நன்றாகப் படித்திருக்கிறீர்கள்; பொருளும் தெரிகின்றது. வேறு குறட்பாக்களைப் படிப்போம். (ஆசிரியர் புல்தரையைக் காட்டுகின்றார்.) இதோ இந்தப் புல்தரையைப் பாருங்கள். மிகவும் சிறிதாகவும் பசுமையாகவும் புல் இருப்பதைப் பாருங் கள். இந்தச் சிறிய புல்லும் தண்ணீர் இல்லாவிட்டால் முளைக்குமா? மாணவர்கள் : மு: எக்கrது ஐயா ! ஆசிரியர் : திருவள்ளுவர் எல்லா நீதிகளையும் நமக்கு அளித்திருக்கின்றார் அல்லவா? அவைகளிலே மழை யைப் பற்றியும் சொல்லி இருக்கின்றார். வானத்தி லிருந்து மழைத்துளிகள் விழாவிட்டால் இந்தப் புல்கூட முளைக்காது. அப்படி யென்ருல் உலகில் வாழும் மக்களை யெல்லாம் வாழ்விப்பது எது? மாணவர்கள் : மழையேதான்! ஆசிரியர் : உலகத்திலுள்ள உயிர்களை யெல்லாம் காப் பாற்றுவது மழையேதான்! இந்தச் சிறிய புல்லினைக் கூட. காண முடியாமல் போய்விடும்! எப்போது?