பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 ஆசிரியர் : நல்ல கேள்விதான்! தலை என்றால் நமக்கு இருக்கின்றதுபோல அல்ல பசும்புல் முளைக்கும்போது சிறிய தோற்றமாக இருக்கின்றதே-தொடக்கம் அது தான் தலை. முதலில் வெளியில் தெரிகின்ற பகுதி மிகச் சிறியதாக இருப்பது. அதைத்தான் தலை யென்று குறித்தார். பசும்புல்லைப் பார்த்தவுடன் உங்கட்கு என்ன நினைவுக்கு வரும்? மாணவர்கள் : (எல்லோரும்) இந்தக் குறட்பா நினைவுக்கு வந்துவிடும் ஐயா! ஆசிரியர் : புல்லைக்கண்டு குறட்பாவைப் படித்துக்கொண் டிருந்தீர்கள். அதோ சிறிய கிளையின் மீதிருந்து பறந்து போகின்றவைகளைப் பாருங்கள். மாணவர்கள் : காகங்கள் பறந்து போகின்றன. ஆசிரியர் : எங்கே போகின்றன? மாணவர்கள் : (ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு) அதோ நீர்த் தொட்டிக்கு அருகிலே போய் உட்கார்ந்து கொண்டன ஐயா! ஆசிரியர் : இன்னும் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருங்கள் என்ன நடக்கின்றன சொல்லுங்கள். முருகேசன் மட்டும் எல்லாவற்றையும் பார்த்துச் சொல்லட்டும்! முருகேசன் : எல்லாம் பார்த்துவிட்டேன் ஐயா! காகங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்தன. எல்லாம் 'கா' கா’ என்று கத்தின. மற்றக் காகங்களும் பறந்து வந்து சேர்ந்தன. தரையில் கிடந்த உணவுப் பொருள்களை எல்லாம் உண்ணுகின்றன. மகிழ்ச்சியாகவே இருப்பன போலத் தோன்றுகின்றன. பிறகு பறந்து போகின்றன !