51
5 I
ஆசிரியர் : முருகேசன் மிகச் சிறப்பாக - விளக்கமாகச் சொல்லிவிட்டானே! நாடகத்தில் நடிகன் பேசுவதைப் போல அப்படியே நடிப்போடு கூறிவிட்டானே! சுந்தரம் : ஆம் ஐயா! முருகேசன் நல்ல நடிகன்தான். பள்ளிக்கூடத்தில் நடித்துப் பரிசுகள்கூட வாங்கி இருக் கின்றான் ஐயா! ஆசிரியர் : ஒ! அவனா இவன்! சரி! இப்போது உங்கட்கு நல்ல நீதியொன்றினைத் திருக்குறளிலிருந்து சொல்லப் போகிறேன். நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். (மாணவர்கள் ஆசிரியரை உற்று நோக்கியவண்ணம் இருக்கின்றனர்) ஆசிரியர் : மாணவர்களே! நான் கேட்கின்ற கேள்வி களுக்கு விடையளிக்க வேண்டும். மற்றக் காகங்களெல் லாம் அந்த இடத்திற்கு எப்படி வந்தன? மணி : அங்கே இருந்த காகங்கள் கா கா எனக் கரைந்த தால், அதைக் கேட்டு மற்றக் காகங்கள் அங்கு வந்து சேர்ந்தன. சுந்தரம் : மற்றக் காகங்களையும் இந்தக் காகங்கள் அழைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர் : ஆம். சுந்தரம் சொல்லுவது முற்றிலும் உண்மை மற்றக் காகங்களையும் கூப்பிட்டன என்பது தான் சரி! எதற்காகக் கூப்பிட்டன? முருகேசன் : சாப்பிடுவதற்குத்தான். மாணிக்கம் : மறைத்து வைத்துச் சாப்பிடாமல் தன்னு டைய இனத்தை அழைத்து எல்லோருமாகச் சாப்பிடு வதற்காக. ஆசிரியர் : நீங்கள் சொல்லுவதே ೭೯7)u. உணவு கிடைத்தபோது தனது இனமாகிய சுற்றத்தார்களை