பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52 யெல்லாம் அழைத்துக் கலந்து ஒன்றாகச் சாப்பிடுவது தான் நல்லது எவ்வளவு சிறந்த குணம் பார்த்தீர் d5 GYTIT , முருகேசன் : ஆம் ஐயா! அருமையான குணம்! பாராட்ட வேண்டிய பண்பு மனிதர்களுக்கும் அப்படிப்பட்ட குணம் இருந்தால் எவ்வளவோ நன்மை யல்லவா? ஆசிரியர் : (சிரித்துக்கொண்டே) நமது நடிகன் நன்றாக விளக்கம் செய்துவிட்டான், காகத்தினிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல நீதியைத்தான் நமது ஆசிரியர் வள்ளுவனாரும் நமக்கு அறிவுறுத்துகின்றார். குறட்பாவினைச் சொல்லுகின்றேன்; எழுதிக்கொள் ளுங்கள்! - (ஆசிரியர் சொல்லுகிறார்; மாணவர்கள் எழுதிக் கொள்ளுகிறார்கள்) காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே உள. குறட்பாவை எழுதிக்கொண்டீர்களா? மாணவர்கள் : (தலை யசைக்கிறார்கள் எழுதி முடித்த தாக) ஆசிரியர் : குறட்பாவுக்குச் சொல் பிரித்துப் பொருள் சொல்லுகின்றேன். கவனமாக எழுதிக்கொள்ளுங்கள்! (சொல் சொல்லாக உரை சொல்லுகிறார்) காக்கை - காகங்கள், கரவா - மறைக்காமல், கரைந்து - கூவி தனது இனத்தை அழைத்து, உண்ணும் - கும்பலாக உணவு உண்ணும், ஆக்கமும் - சுற்றத்தினரால் வரும் செல்வாக்கும்,