பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

好7

வேண்டும். அடக்கமில்லாதவர்கள் எப்போதும் துன் பத்தில் அகப்பட்டுக்கொள்ளுவார்கள். அ.க்கம் இருப் பவர்களுக்குத் துன்பமே வராது. நமது ஐந்து பொறி களையும் அடக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆமையைக் காட்டித் திருவள்ளுவர் நமக்கு நீதியினைப் புகட்டுகிறார். இப்போது குறட்பாவைச் சொல்லுகிறேன். எழுதிக் கொள்ளுங்கள். (ஆசிரியர் குறட்பாவினைச் சொல்ல மாணவர்கள் எழுதிக்கொள்ளுகின்றனர். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. ஆசிரியர் : இந்தப் பிறவியில், ஆபையினைப் போல் ஐந்து பொறிகளையும் அடக்கமாக வைத்துக்கொண்டு வாழ்ந் தால் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல-ஏே spas, 17ms? பி லும் அந்த அடக்கம் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கும், புரிகின்றதா? சுந்தரம் : நன்றாக விளங்குகிறது ஐயா! சொல் சொல் லாகச் சொல்லுங்கள் அப்போதுதான் நன்றாகப் புரி கின்றது. ஆசிரியர் : இப்போது குறட்பாவின் கருத்துரைதான் சொன்னேன். சொல் சொல்லாகப் பொருள் சொ ல்து கின்றேன். எழுதிக்கொள்ளுங்கள். (சொல் சொல்லாகப் பிரித் துச் சொல்ல மாணவர்கள் எழுதுகின்றனர்.) ஒருமையுள் - ஒரு பிறப்பிலே, ஆமைபோல் - ஆமையைப் போல, ஐந்து -ஐந்து பொறிகளையும்,