61
6 I
ஆசிரியர் : பார்த்தீர்களா? அந்த நிலத்தின் குணத்தினை ! நிலத்தைத்தான் தோண்டுகின்றான். தன்னையே தோண்டுகிறவனையும் அந்த நிலம் தாங்கிக்கொண் டிருக்கிறது! மாணிக்கம் : ஆமாம் ஐயா! அந்த நிலம் மிகவும் பொறுமை யாகத் தாங்கிக்கொண்டிருக்கின்றது. அவனை ஒன் றுமே செய்யவில்லை! வேலன் : அவனைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற நிலத்தை அவன் தோண்டிக்கொண்டே இருக்கின்றான். அவனை அந்த நிலம் தாங்கிக்கொண்டு அவனுக்கு ஒரு கெடுதியும் செய்யாமலேயே இருக்கின்றது! ஆசிரியர் : மாணவர்களே! நீங்கள் ந ல் ல ப டி யாக ச் சிந்தனை செய்து பேசுகின்றீர்களே! நான் சொல்லப் போகிற குறட்பாவின் கருத்தினை விளக்குகின்றேன். கூர்ந்து கவனியுங்கள். இந்த நிலம் எவ்வளவு பொறுமையாக இருக்கின்றது! அந்த நிலத்தின்மீதே நின்றுகொண்டு, அவன் அந்த நிலத்தினைத் தோண்டி அதற்குத் துன்பம் தருகின் றான். இருந்தாலும் துன்பம் தருகின்றவனையும் அந்த நிலம் தாங்கிக்கொண்டுதானே இருக்கின்றது. பொறுமை’ என்கின்ற குணம்தான் மிகவும் சிறந்தது! நிலத்திலிருந்து இந்தக் குணத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? மாணிக்கம் : ஐயா! நிலத்தை அந்த ஆள் தோண்டு கிறான். துன்பம் செய்கிறான். அதையும் அந்த நிலம் பொறுத்துக்கொண்டு இருக்கின்றது. நாம் எதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்? ஆசிரியர் : அதைத்தான் உங்கட்கு இப்போது சொல்கின் றேன். இன்னும் குறட்பாவின் விளக்கம் முடிந்துவிட வில்லை! நம்மையும் சிலர்-தீய குணம் உள்ளவர்கள்