60
60 தோண்டிக்கொண்டிருக்கின்றான். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.) முருகேசன் : (மாணவர்களைப் பார்த்து) இங்கே வந்து பார்க்கவேண்டும் என்று சுந்தரம் சொன்னான். இங்கே என்ன இருக்கிறது. பள்ளம் தோண்டுவதைக் கூட இவன் பார்த்திருக்கமாட்டானா! ஆசிரியர் : முருகேசா! நீ கேட்பதும் சரிதான்! இந்தப் பூங்காவை முழுதும் சுற்றிப்பார்க்கத்தானே வந்தோம். எங்குப் போய்ப் பார்த்தால்தான் என்ன? இங்கு வந்ததும் நல்லதுதான்! - மாணிக்கம் ! ஐயா! இங்கே பள்ளம் தோண்டிக்கொண் டிருக்கின்ற காட்சியைப் பார்க்கின்றோம். இங்கு வந் ததும் நல்லது என்று சொன்னீர்களே அது ஏன் ஐயா? ஆசிரியர் : இங்கே நடந்துகொண்டிருக்கின்ற நிகழ்ச்சியை நன்றாகப் பார்த்துக்கொண்டிருங்கள். திருவள்ளுவர் நமக்குச் சொல்லுகின்ற நல்ல நீதியினை உங்கட்குச் சொல்லப்போகின்றேன். (மாணவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக் கின்றனர்) பூமியைத் தோண்டுகின்றானே அந்த ஆள்: அவன் எங்கே நின்றுகொண்டிருக்கின்றான்? மணி : அந்தப் பூமியின் மீதுதான் நின்றுகொண்டிருக்கின் றான் ஐயா ! ஆசிரியர் : அவன் விழுந்துவிட்டால் அவனைத் தாங்கிக் - கொண்டிருப்பது எது? சுந்தரம் : அந்த நிலம்தான் தாங்கிக்கொண்டிருக்கின்றது: நிலத்தின் மீது நின்றுகொண்டுதான் தோண்டுகிறான்.