பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

(மாணவர்கள் எல்லோரும் மாணிக்கத்தைப் பார்க் கின்றனர். மாணிக்கம் : எனக்குச் சிறிய ஐயம் ஒன்று தோன்றுகிறது! ஆசிரியர் : நன்றாகக் கேட்டுத் தெரிந்துகொள். என்ன சொல்! தாராளமாகக் கேட்க வேண்டும். அதுதான் நல்லது. மாணிக்கம் : அந்த ஆமை தனது ஐந்து உறுப்புகளையும் இழுத்து ஒட்டிற்குள் வைத்துக் காப்பாற்றிக்கொள்ளு கிறது. நமக்கு ஒடு போல் ஒன்றும் இல்லையே ஐயா! நாம் எதைக் கொண்டு ஐந்து பொறிகளையும் அடக்கிக் காப்பாற்றிக் கொள்ளுவது? ஆசிரியர் : மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி! அப்ப டித்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். மனிதனுக்குத்தான் அறிவு இருக்கின்றது. இதைத் தான் பகுத்தறிவு என்று சொல்லுகின்றோம். நன்மை -தீமை என்பதை நமக்குச் சொல்லுவது நமது அறிவு தான். ஆதலால்தான் நாம் நமது அறிவினைப் பயன் படுத்தி அடக்கம் என்கின்ற நற்குணத்தினைக் காப் பாற்றி வாழவேண்டும். சுந்தரம் : (பூங்காவனத்தில் எங்கேயோ ப ார் த் து க் கொண்டு) அங்கே ஒர் ஆள் என்னமோ செய்துகொண் டிருக்கின்றான் ஐயா! அந்தப் பக்கமாகப் போய்ப் பார்க்கலாம், ஐயா! ஆசிரியர் : அந்த ஆள் பள்ளம் தோண்டிக்கொண்டிருக் கின்றான். எல்லோரும் வாருங்கள். சுந்தரம் பார்க்க விரும்புகின்றான். அங்கேயே போவோம். (ஆசிரியரும் மாணவர்களும் அங்கே வந்து அங்கு போடப்பட்டிருந்த திண்ணை போன்ற மேடான இடத்தில் உட்காருகின்றனர். ஒரு ஆள் மண்வெட்டியால் பள்ளம்