பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

t

w 5 மாணிக்கம் : ஐயா! இந்த உருவங்களை யெல்லாம் யாரைப் பார்த்துச் செய்திருப்பார்கள்? ஆசிரியர் : யாரையும் பார்த்துச் செய்திருக்கமாட்டார்கள் ! இது ஒரு கலை! சிற்பிகள் தங்களுடைய திறமையினால் தான் செய்திருப்பார்கள்! இந்த மண் உருவங்கள் பார்ப்பதற்கு அலங்காரமாக அழகுடன் தான் இருக் கின்றன ! அவ்வளவுதான்! மாணிக்கம் : சில பேர்களைப் பார்த்தால் இதுபோல் அழகாக இருக்கிறார்கள் ஐயா! ஆசிரியர் : ஆமாம்! பார்ப்பதற்கு அழகாக ஒப்பனை செய்துகொண்டு பலபேர் இருக்கிறார்கள்! அவர்களும் உலகத்தில் வாழ்கின்றார்கள்! திருவள்ளுவர் இதுபோல் மக்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லுகின்றார்! முருகேசன் : அவர்கள் எல்லாம் எங்கே ஐயா இருக்கிறார் கள் ! ஆசிரியர் : அப்படிப்பட்டவர்கள் எங்கும் இருப்பார்கள்! திருவள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள். மண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் போன்றவர்கள் யார் என்பதைக் கூறுகின்றார். (மாணவர்கள் குறிப்பு எழுதுகிறார்கள்.) மக்களாகப் பிறந்தவர்கள் நல்ல கல்வி கேள்விகளில் சிறந்து நுட்ப அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் பயன்படுவார்கள்; கல்வி இருக்கவேண்டும். அறிவை வளர்க்கவேண்டும். நுட்ப மாக ஆராயும் ஆற்றலும் இருக்கவேண்டும். மாணிக்கம் : அப்படி இல்லாத மனிதர்கள்? ஆசிரியர் : (அந்த மண்பொம்மைகளைக் காட்டி) இவை போலத்தான்! இந்த உருவங்களும் அழகாகத்தான் இருக்கின்றன; வேறு இவை என்ன செய்யமுடியும்! 5