பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66 அதுபோலப் பல பேர் தங்களை அழகாக ஒப்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள். கல்வியறிவோ ஆராய்ந்துணரும் நுட்பமான திறமையோ அவர்களுக்கு இருக்காது. அவர்களுக்கும் இந்த மண் உருவங்களுக் கும் என்ன வேறுபாடு? சுந்தரம் : ஒன்றுமே இல்லை ஐயா! ஆசிரியர் : குறட்பாவினைச் சொல்லுகிறேன் எழுதிக் கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்ல மாணவர்கள் எழுதுகின்றனர்.) நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை பற்று, (சொற்பொருள் சொல்லுகின்றார்.) நுண் -நுட்பமாகிய, மாண் - மாட்சிமைப்பட்ட, நுழை - பல நூல்களைக் கற்ற, புலம் - அறிவை, இல்லான் - இல்லாதவனுடைய, எழில் - அலங்காரமான, நலம் - அழகு, மண் - மண்ணினால், மாண் - மாட்சிமைப்பட, புனை - அலங்கரிக்கப்பட்ட, பாவையற்று - உருவத்தில் காணப்படும் அலங்கார எழுச்சியும் அழகும் போன்றதேயாகும். (மாணவர்கள் உரையை எழுதிவிட்டுப் படித்துக் 4ఆఊహాజf. ஆசிரியர் கேள்வி கேட்கின் Дртт.