பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 ஆசிரியர் : மாணிக்கம்! அதோ கும்பலாக பலர் நின்று கொண்டு இருக்கிறார்களே, அங்கே என்ன என்று பார்த்து விட்டு வா. . (மாணிக்கம் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லு கின்றான்.) மாணிக்கம் : எல்லோரும் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐயா! ஆசிரியர் : நானும் அப்படித்தான் நினைத்தேன்; அந்த வணிகரைக் கூப்பிட்டுக்கொண்டு வா. (மாணிக்கம் ஒடிப்போய் அவரை அழைத்துக்கொண்டு வந்தான்) (அந்த இனிப்பு வணிகர் ஆசிரியரைப் பார்த்தவுடன் வணக்கம் செய்கிறார்.) மாணிக்கம் : (அவரைப் பார்த்து) எல்லாம் ஒரே கும்ப லாக இருக்கின்றதே! தனித்தனியாக எப்படிக் கொடுப் பீர்கள்? வணிகர் : (தராசை எடுத்துக்காட்டி) இதோ இருக்கின் றதே! இதில் நிறுத்துக் கொடுப்பேன்! (ஆசிரியரைப் பார்த்து) ஐயா! பிள்ளைகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? s ஆசிரியர் : ஒவ்வொருவருக்கும் 50 கிராம் பண்டம் கொடு ங்கள்! (மாணவர்களைப் பார்த்து) போதுமா? மாணவர்கள் : போதும் என்று தலையை அசைக்கின்றார் கள் . (வணிகர் தராசை எடுத்துப் பிடித்து எடை போட்டுத் தருகிறார். மாணவர்கள் வாங்கிக்கொள்ளுகிறார்கள்.) மாணிக்கம் : சரியாக எடை போடுங்கள்!