பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

வணிகர் : ( சிரித்துக்கொண்டே ) உங்களுக்கா, தப்பு செய்வேன். இதோ பாருங்கள்! இரண்டு தட்டுகளும் சமமாக இருக்கின்றன. நான் பிடித்திருப்பதற்குக் கீழ் முள் நேராக இருக்கிறது, கோலும் சமமாக இருக்கின் றதே! (வணிகர் எல்லோருக்கும் நிறுத்துக் கொடுத்தார். ஆசி ரியர் பணம் கொடுத்தவுடன் வணிகர் வாங்கிக்கொண்டு போய்விட்டார். மாணவர்கள் எல்லோரும் சாப்பிட் டனர். ஆசிரியரும் சாப்பிட்டார்.) ஆசிரியர் : உங்களுக்கு நான் சொன்ன பரிசு இதுதான்! எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா? சுந்தரம் : சாப்பிட்டோம் ஐயா! ஆசிரியர் : இப்போது குறள் சொல்லுகிறேன், நன்றாகக் கேளுங்கள்! நாம் எல்லோரும் யாரிடத்திலும் நேர்மையாகவே நடந்துகொள்ள வேண்டும். ஒரவஞ்சனையாக நடக் கவே கூடாது. நமது மனச்சாட்சிக்கு ஏற்ப யாரிடமும் ஒருசார்பு காட்டாமல் நடந்துகொள்ள வேண்டும். இதைத்தான் அந்த வணிகரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். * மாணிக்கம் : அவர் இனிப்புத்தானே ஐயா கொடுத்தார்! அவரிடம் எப்படி ஐயா கற்றுக்கொள்ளுவது? ஆசிரியர் : சொல்லுகிறேன். நிறுத்துக் கொடுத்தாரே தராசு சமமாக இருந்தது. அதுபோலத்தான் நாம் இருக்க வேண்டும். மாணிக்கம் : ஆமாம் ஐயா! தராசு சமமாகத்தான் இருந் தது, அந்த முள்ளும் நேராகத் தான் இருந்தது. ஆசிரியர் : அதைத்தான் சொல்லுகிறேன். முதலில் அந்தத் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக