உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

மாணிக்கம் : ஐயம் ஒன்றும் இல்லை ஐயா! இந்தப் பூங்கா மிகவும் பெரிது என்று எங்கள் தந்தை அடிக்கடி சொல்லுவார். முன்பு பெரிய தோப்பாக இருந்ததாம். எங்கள் தாத்தா இருந்தபோது இந்தப் பூங்கா அமைக் கப்பட்டது என்று சொன்னார்கள். இன்னும் பல இடங்களைப் பார்க்கலாம் ஐயா! ஆசிரியர் : அப்படியா! மிகவும் நல்லது. உங்களுக்கு விருப்பமாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்! வாருங்கள்! இந்தப் பாதையிலேயே நடந்து செல்லு வோம்! (ஆசிரியரும் மாணவர்களும் பேசிக்கொண்டே நடந்து போகின்றனர். இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வருகிருர்கள்.) ஆசிரியர் : நாம் இங்குச் செலவிடுகின்ற நேரத்தைப் பய னுள்ள நேரமாகவே செலவிட வேண்டும். ஆதலால் தான் குறட்பாவும் சொல்லிக்கொண்டு வருகின்றேன். நீங்களும் உங்கள் மனதில் தோன்றியதை அச்சமில் லாமல் கேளுங்கள். அப்போதுதான் எனக்கும் மகிழ்ச்சி யாக இருக்கும். - (மாணவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்ளு கின்றனர். எல்லோரும் மாணிக்கத்தைக் கேட்கும்படி சைகை காட்டுகின்றனர்.) மாணிக்கம் : ஐயா! அதோ அந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டு ஒர் ஆள் மரத்தைப் பார்த்து அம்பு விட்டுக்கொண்டிருக்கின்றான். அவன் வி ல் ைல வளைத்து அம்பு விடுவது வேடிக்கையாக இருக்கிறது! ஆசிரியர் : மரத்தில் குறிபார்த்து அடித்துக்கொண்டிருக் கின்றான்; வில்லும் அம்பும் அதற்குத்தானே பயன் படும். அதில் வேடிக்கை என்ன இருக்கின்றது? இருந் தாலும் வாருங்கள் அங்குப் போய்ச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்.