80
80 (எல்லோரும் அந்த மரத்திற்கு அருகில் வந்து சேரு கின்றார்கள். வில்லும் அம்பும் வைத்திருப்பவனைப் பார்க்கின்றார்கள். அவன் செய்கின்ற செயலைக் கவனிக்கிறார்கள். அவன் அம்பை எடுத்தான். வில்லை யும் வைத்துக்கொண்டிருக்கின்றான். அந்த வில்லின் நடுவில் அம்பினை வைத்து, வில்லினை நன்றாக வளைக்கிறான். வில் நன்றாக வளைந்தது. அம்பினை வைத்து மரத்தில் அடிக்கின்றான். குருவிகளைப் போய் அம்பு தாக்குகிறது. குருவிகள் ஒசை செய்துகொண்டு பறந்தோடுகின்றன.) ஆசிரியர் : பார்த்தீர்களா இந்தக் காட்சியை! என்ன புரிந் தது உங்கட்கு? சொல்லுங்கள்! வேலன் : பறவைகள் எல்லாம் பறந்து போகின்றன ஐயா! மணி : (சிரிக்கின்றான்) வேலு! பறவைகள் எல்லாம் எப்படியடா போகும்! தரையில் நடந்தா போகும்? ஆசிரியர் : வில்லையும் அம்பையும் பார்த்துக்கொண்டிருந் தீர்களே! அந்தச் செயலில்தான் ஆழ்ந்த கருத்தொன்று இருக்கின்றது. கண்டுகொள்ள முடிகிறதா? எந்தக் காட்சி உங்கள் கவனத்தை இழுத்தது? மாணிக்கம் : அந்த வில் வளைகின்ற காட்சி வியப்பாக இருக்கின்றதய்யா! ஆசிரியர் : ஆம்! அதைத்தான் குறிப்பாகக் கவனித்தீர் களா என்று நான் கேட்டேன். வில் நன்றாக வளைந்த பிறகு என்ன ஆயிற்று? முருகேசன் : வில் வளைந்ததால்தான் அம்பு வேகமாகப் போயிற்று! அந்த அம்பு வேகமாகப் போவதற்கு வில் தான் ஐயா காரணம்! ஆசிரியர் : அதுவும் சரிதான்! அம்பு என்ன செய்தது? நல்ல செயலா செய்தது?