பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியே வாழ்க்கையின் தொண்டு. தெள்ளு தமிழ்த்தொண்டும் அதுவே ஆகும். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் மொழியைத் தாய்: மொழியாகக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையே மனித. வாழ்க்கையின் தனிச் சிறப்பு என்று கருதுவதுதான் தமிழனுக்கு இருக்கவேண்டிய உயர்ந்த பண்பாகும். - என்னுடைய இளமை காலம் முதற்கொண்டே உலகப் பொதுமறையாகிய திருக்குறள் நூலினை நன்றாக்க் கற்க வேண்டும் என்றும், திருவள்ளுவர் கருத்தினை நாடறியச் செய்யவேண்டும் என்றும் ஆர்வத்துடன் இருந்தேன்" என்பதினைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றேன். என்னுடைய உயர் நிலைப் பள்ளி படிப்பினையும், கல்லூரி படிப்பினையும் திருச்சியில் முடித்தேன். 1935ம் ஆண்டிலேயே நல்லமுறையில் குறட்பாக்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து நல்ல தமிழ்ப் புலவர்க்ளிடம் உரை பயின்று மகிழ்ந்தேன். பிறகுதான் சட்டக்கல்லூரி படிப்: பிற்குச் சென்னைக்கு வந்தேன். நகைச்சுவையுடனும், எளிமை நயத்துடனும் பேசுகின்ற பழக்கத்தினை அந்தக் காலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். --- - திருக்குறள் மக்களிடையே நன்கு பரவுவதற்குச் சொற். பொழிவுகள் நிகழ்த்துவது மட்டும் போதாது என்று கருதி மிகமிக குறைந்த விலையில் 40 நூல்களுக்கு மேலாக எழுதி வெளியிட்டு வந்தேன். இந்தப் பணியினை 1945ம் ஆண்டி லிருந்து செய்து வந்தேன். பேச்சினாலும், எழுத்தினாலும் கடந்த 50 ஆண்டுகளாக அடியேன் செய்து வந்த தொடர்ச்சி யான பணியினால்தான் திருக்குறள் சிந்தனை மக்க.