உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வினையினை மேற்கொண்டு விரும்பிச் செய்பவன் என்பதே அதன் பொருளாகும். அத்தன்மையினைத் தருவது முயற்சி என்பதாகும். வினையினைச் செய் கின்ற விருப்பமுள்ளவன் இயல்பாகவே இன்பத்தின்ை அடைபவனாகின்றான். அந்த இன்பம் வினை செய்ப வனுக்குத் தானாகவே வந்து சேரும். . அப்படிப்பட்டவன் இன்பம் என்கின்ற ஒன்றினை விரும்பி கினைத்து இருக்கமாட்டான். அவன் விரும்பி கினைத்திருப்பதெல்லாம் முயற்சியினை மேற்கொண்டு தொழில் புரிவதேயாகும். இன்பம் விழையான் வினை விழைவான்’ என்று உலக உண்மையினை எடுத்துக் கூறிக் குறட்பா தொடங்குகின்றது. - தானாகவே வரும் - இன்பத்தினை விரும்பமாட்டான் என்று குறிப் பிடப்பட்டதால் இன்பம் என்பதனையே அவன் வெறுத்தவன் என்பது பொருளல்ல. முயற்சியினால் வினை செய்வதை மேற்கொள்ளாமல் இன்பத்தினை மட்டுமே விரும்பிக்கொண்டு இருக்கமாட்டான் என்பதே பொருளாகும். வினையினை விரும்பாமல் இன்பத்தினை மட்டும் விரும்புகிறவன் வாராத ஒன்றினை விரும்புகின்றான் என்பதேயாகும். அவ்வாறில்லாமல் இன்பத்தினை எண்ணாமல் வினையினைமட்டிலும் விரும்பிச் செயல் மட்டும் புரிந்திருப்பவனை இன்பம் தானாக வந்து அடைவதாகும். - - கேளிர் என்பது சுற்றத்தினரையும் நண்பர் களையும் குறிப்பதாகும். ஆதலால்தான் முயற்சியின் மிகுதியினால் வினையினை விரும்பிச் செயலாற்று