உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 பவன் தனக்கு மட்டுமன்றித் தன்னுடைய சுற்றத்தார், கண்பர் முதலிய அனைவருக்கும் உண்டாகின்ற வறுமை, வருத்தம், முதலியவைகளைத் தானே தாங்கி நீக்குகின்ற தூண் போன்றவனாகின்றான். ஆதலால்தான் அப்படிப்பட்டவனுடைய சிறப்பு மிகவும் பெரிய சிறப்பாகும். அச் சிறப்பிற்கு முதன் மையான காரணமாக இருப்பது முயற்சி என்கின்ற ஆள்வினையுடைமையே யாகும். - இன்பம் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துான்றும் தூண்." - இக்குறட்பாவில் *ஊன்றும் துரண்' என்பது மகவும் சிந்திக்கத் தக்கதாகும். பலருடைய துன்பத் தினையும் நீக்கி அதனைத் தாங்கி அவர்களைக் காப்பாற்றும் துரண் போன்றவனாகின்றான். முயற்சியில்லாதவர்கள் இத்தகைய கி ைல ைய. அடைதல் முடியாது. - துன்பத்தினைத் துடைக்கின்ற, அதாவது நீக்கு கின்ற திறமை வினை மேற்கொண்டு செயல் புரியும் முயற்சியுடையவர்களுக்கேயாகும். பலர் முயற்சி யின்றிச் செயல் புரிதலைக் .ெ க | ள் ள | ம ல் இன்பத்தினையே விரும்பி இருக்கும் பழக்கம் மிகவும் இழிவானது என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது. - ஆண்மைத் தன்மை மேன்மை தரும் . . . . மனிதப் பிறவியில் முயற்சியோடு செயற்படும் ஆண்மைத் தன்மையே கருதப்பட்டுப் பாராட்டப்பட வேண்டியதாகும். துன்பத்தினை நீக்குதல் என்பது எல்லோராலும் எளிதாக முடியும் காரியமன்று. -