உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 05 செயலில் இறங்கிச் செயல் புரிவோர்களுக்குத்தான் இது முடியும் என்பதனை வற்புறுத்த வேண்டியே அவனைத் துன்பம் துடைத்துான்றும் துாண்’ என்று சிறப்பாக மேன்மை பெற்றான். தனக்கும் மற்றவர் களுக்கும் உண்டாகின்ற துன்பத்தினைப் போக்கு கின்ற உயர்ந்த பண்பு மக்கள் அனைவருக்குமே இருக்கவேண்டிய இலக்கணமாகும். துன்பம் என்பது தொழிலினை மேற்கொண்டு செய்கின்றபொழுது இடையில் வருதல் நேரிடும். 'தொழிலை மேற்கொள்ளுதல் என்று கூறப்படுவதால் மனித இயல்பு என்பதே எக்காலத்திலும் செயற்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதாயிற்று. துன்பம் என்பதனை இடும்பை என்று ஆசிரியர் கூறுவர். இடும்பை வருகின்றபொழுது அதனைக் கண்டு. வருந்துதல் மனித இயல்பாகவே இருத்தலும் கூடும். இடும்பையினைக் கண்டு வருந்தி வாட்டமுற்றால் அவ்விடும்பை வாழ்க்கையினைச் சிதைத்து விடும். ஆகையினால் இடும்பைக்குச் சிறிதேனும் வருந்தாமல் இருப்பதே உயர்ந்த பண்பாகக் கருதப்படும். .. அச்சமே வேண்டாம் இடும்பை வந்தால் அதற்கு இடும்பைப் படாமல் இருத்தல் வேண்டும். அதாவது வருத்தம் கொள்ளாமல் இருத்தல்வேண்டும். இடும்பைக்கு அஞ்சி வருந்திக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டால் அத்துன்பம் வாழ்க்கையினைப் பாழாக்கும். செய்யும் தொழிலினைச் செய்யாமல் கிறுத்திவிடும் இடும்பை வந்தபொழுது அதனால் மனம் இளைத் து