உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வேண்டுமென்றால் காலங்கடத்தல் (தாமதம்) என்று கூறலாம். . '. - - 'கெடுநீர் என்ற குணம் தொழிலினை நீட்டித்துச் செய்யும் பழக்கத்தினை உண்டாக்கிவிடும். தொழிலி னைக் குறித்த காலத்தில் விரைந்து செய்தலே அருமையான பண்பாகும். எத்தொழிலினையும் காலம் கடத்திச் செய்கின்ற பழக்கம் தவறானதாகும். காலத்தின் அருமையினை எப்பொழுதும் அறிந்து: உணர்ந்து கடத்தல் வேண்டும். -

தீயவைகளே இவைகள்

எநெடுநீர் என்கின்ற தீய குணம் காலத்தின் அருமை யினை அறியாதபடி செய்துவிடும். எதையுமே நீட்டித்துச் செய்யும் பழக்கத்தினை, கெடுநீர் என்கிற குணம் உண்டாக்கிவிடும். ஆதலினால் முதன்மையாக வைத்துக் கண்டிக்க வேண்டிய தீய குணம் கெடுர்ே என்பது குறிப்பிடத்தக்கது. . சுறுசுறுப்பினை இயல்பாகவே பெற்றிருத்தல் மக்கட்குரிய இலக்கணமாகும். இதனைப் பெற்றிராத வர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையவே முடியாது. இப் பண்பாட்டினை மடி என்கின்ற சோம்பல் குணம் அழித்துவிடும். * - மக்களுக்கென்ேற அருமையாக அமைந்திருக்க வேண்டிய சிறப்பான மற்றொரு குணம் நினைவு ஆற்றல்’ என்பதாகும். இக்குணத்தினை மறதி: என்பது கெடுக்கும். மறதி என்கிற குணம் காணப் பட்டால் அக்குணம் பெற்றிருப்பவன் உயர்ச்சியடைதல் முடியாததாகும் என்றே கொள்ளுதல் வேண்டும்.