உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 மறதி என்பது துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்குவதாகும். மறந்துவிடுதல் என்பதை அடிக்கடி கொண்டிருப்பவன் வாழ்க்கையில் சரிந்து விடுவான் என்பதே பொருளாகும். துயில் என்று கூறக் .கூடிய துக்கமும் மக்கள் வாழ்க்கையில் அழிவைத் தேடித் தருகின்ற மிகக் கொடிய குணமாகும். - அளவில்லாமல் துயில்கின்ற மக்களையும் கான முடிகின்றது. இத்தகைய நான்கு தீய குணங்களையும் விடாமற் கொண்டிருக்கின்றவர்கள் கெட்டுவிடுவார்கள் என்பது திண்ணம். கெட்டுப் போகின்றவர்களுக்டிே இந்த நான்கு குணங்களும இருந்து வரும். நான்கும் மிக மிகக் கொடியவையாகும். - எமடி என்றும் கெடுநீர்’ என்றும் மறவி என்றும் துயில்’ என்றும் கூறப்படுகின்ற இந்த நான்கு குணங் களையும் கொடிய தீமைகள் என்று கினைக்காமல் அவைகளை மேற்கொண்டிருக்கின்ற மக்களும் உண்டு. இக் குணங்களைக் கொண்டவர்கள் கெட்டுப் போகின்ற தன்மையாளர்கள் என்பதனைக் கெடுநீரார் என்று குறட்பா குறிக்கின்றது. . . . . கெட்டுப் போகின்றவர்கள் இத்தீய குணங்களை காடிச் செல்வார்கள். இக்குணங்களைக் கொள்ளுவதில் விருப்பம்கூடக் காட்டுவார்கள். ஆதலால்தான் விரும்பி ஏறுதற்குரிய மரக்கலம் போன்றதே இத்தீயகுணங்கள் என்பதை கன்கு தெளிவுபடுத்த வந்த ஆசிரியர் காமக் கலன்" என்று குறித்தார்.