உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 அமைந்திருத்தல் வேண்டுமென்பது உண்மையிலும், உண்மையாகும். பொருட் செல்வமில்லை யென்றால்: இவ்வுலகில் வாழ முடியாது. உலகம் என்பது பொருட் செல்வத்தில் இருந்து வருவதாகும். மக்கள் வாழ்க்கையினை அளவிட்டுப் பார்க்கின்ற பொழுது பொருட்செல்வத்தினை முதன்மை யாக வைத்துப் பேசுவது உலக மக்களிடையே கிலை பெற்றுள்ள வழக்கமாகும். ஆதலினால் இவ்வுலகில் மக்களிடையே வாழ்பவர்கள் பொருட் செல்வத்தினைப் போற்றிக் கருதுதல் வேண்டும். பொருட் செல்வத்தினை கன்கு மதித்தல்: வேண்டும். ஒருவருக்கு, கல்வியறிவும் கற்குணங்களும் அரிய பண்பாடுகளும் அமைந்திருந்தாலும் பொருட் செல்வமில்லையென்றால் உலக மக்களால் மதிக்கப் படுதல் இல்லாமற் போய்விடும். இவ்வுலகில் வாழும் மக்கள் பொருளில்லாதவர் களாக ஆகிவிட்டால் வாழ்க்கையினை கடத்த முடியா தென்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். மதிப்பைத் தரும் பொருட் செல்வத்தைப் பெற்றிராத ஒருவன் தன்பால் இருக்கும் ஏனைய தன்மைகளினால் மக்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணுதல் தவறாகவே முடியும். பொருளில்லாதவர்களை மற்றவர்கள் மதிகக மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, இகழ்ந்து பேசுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. . . . பொருள் படைத்த ஒருவன் மக்கட்குச. இருக்க வேண்டிய ஏனைய அரிய பண்பாடுகளைப் பெற் றிரா