உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 விட்டாலும் எல்லோராலும் மதிக்கக் கூடிய சிறப்பினைப் பெறுவான். செல்வம் பெற்றிருக்கின்ற ஒருவரை அவர் தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், கண்ட்ர், கண்பரல்லார் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருமே சிறப்புச் செய்வார்கள். இது உலகியல் வழக்கம். - ஆதலால்தான் பொருட் செல்வம் இல்லாதவர்கள், புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துணர்தல், வேண்டும். பொருட் செல்வம் உடையவர்களைக் கண்ட்ால் மற்றவர்கள் தம்மைத் தாழ்த்திக் கொண்டு செல்வமுடையவரை உயர்த்துவர். భ? இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு இக்குறட்பாவில் எள்ளுவர் என்ற கருத்தினைச் சிந்திக்க வேண்டும். பலராலும் இகழப்படும் நிலைக்குப் பொருளில்லாதவன் வந்து விடுவான். உலகில் செயல்படுகின்ற அனைத்திற்கும் பொருட் செல்வம் இருந்தாக வேண்டுமென்பது வெளிப்படையான கருத்தாகும். . அதனைப் பெற்றிராதவன் தனக்கும் மற்றவர்கட் கும் பயன்படாதவனேயாவான் எ ன் ப த ன ல் எல்லாரும் எள்ளுவர் என்று கூறினார். மற்றவர் களால் இகழப்படும் கிலைமையில் வாழ்தல் மனிதப் பிறவிக்கு இழிவானதாகும். எல்லா மக்களும் இகழ்ந்து பேசுவர் என்று கூறினார். .