உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைக் கருதி அணையாத விளக்கு என்றும் பொருட்செல்வத்தினைச் சிறப்பித்தார். இதனைப் பொய்யா விளக்கம் என்று குறட்பா கூறுகின்றது. பொருளினைப் பெற்றிருக்கும் ஒருவன் தான் இருக்கும் இடத்திலிருந்து மிகமிகத் தொலை தூரத்தில் செய்து முடிக்க வேண்டிய செயல்களையும் செய்து முடிக்க முடியும் என்பது குறிக்கப்பட்டது. ஆதலால் பொருள் என்னும் பொய்யா விளக்கம், என்று ஆசிரியர் அமைத்துக் காட்டுகின்றார். ஆற்றல் மிகுந்த விளக்கு - ஏனைய விளக்குகளுக்கும் பொருட்செல்வம் என்கிற விளக்கிற்கும் உள்ள வேறுபாட்டினையும் கூறுகின்றார். ஒளி தருகின்ற விளக்கு தொலை துரத்திலுள்ள இருட்டினைப் போக்காது. அது அருகிலுள்ள இருளினைத்தான் போக்கும். ஒருவன் கினைத்த இடத்தில் இருக்கும் இருளினைப் போக்க வல்லது பொருட்செல்வம் என்பதனை விளக்கிக் கூற வந்த ஆசிரியர், இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்பதாகக் கூறுகின்றார். பொருட் செல்வம் பெற்றவன் இவ்வுலகில் தான் கினைத்த இடத்திற்கெல்லாம் செல்ல முடியும் என்பதும், அவ்விடங்களிலெல்லாம் எண்ணியதைச் செய்ய முடியும் என்பதும் ஆழ்ந்த பொருளாகக் கூறப்பட்டது. - உலகத்தில் தேசங்கள் பலவாக இருத்தலுண்டு. அந்தந்த தேசத்து நிலைமை பலவகைகளில் வேறுபட்