உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 டிருத்தலும் உண்டு. தொலைவான தொலை துாரங்களில் தேசங்கள் இருப்பதும் உண்டு. - பற்பல விதமான வேறுபாடுகளையும் மாறுபாடு களையும் உடையதாக இருந்தாலும், அப்படிப்பட்ட தேசங்களிலும் எண்ணியபடியே செயலினைச் செய்து முடிக்கும் ஆற்றிலினைப் பொருட்செல்வம் தவறாமல் தந்துவிடும். பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருளுடையவன் கினைத்த தேசத்திறகெல்லாம் செல்லுகின்ற வன்மையினைப் பொருட் செல்வம் பெற் றிருக்கின்றது. எல்லா தேசத்திற்கும் பொருட்செல்வம் செல்ல முடியும். பொருட்செல்வம் செல்லாத இடமே இல்லை. ஒருவன் மனதில் எத்தனையோ எண்ணங்கள் தோன்றலாம். - - எண்ணியது முடியும் அத்தனை எண்ணங்களும் செயற்பட்டுப் பயனளிக்கும் என்று கூறிவிட முடியாது. ஆனால் பொருட் செல்வம் பெற்றிருப்பவன் எண்ணியதை முடிப்பான் என்பதும் உணர்த்தப்பட்டது. பொருளு டையவன் தான் செல்லாமலேயே பொருளினை அனுப்பிச் செயலினை முடிப்பான் எண்ணிய தேசத்திற் குச் சென்று அங்குள்ள இருளினைப் போக்க வல்லது என்ற சிறப்பு வற்புறுத்தப்பட்டது. - இருள் என்று கூறுகின்றபொழுது பகைமை என்று கொள்ளுதல் பொருந்தும். பகைமையையே வெல்லக் கூடிய வன்மை பொருளுக்குத்தான் உண்டு என்று கருதுகின்ற போது, பிற செயல்களையெல்லாம்