உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பொருள் எளிமையாக முடிக்கும்என்பது பெறப்பட்டது. இக்குறட்பாவில் இருள் அறுக்கும் என்று அமைந்துள்ள சிறப்பு, பலகாலும் சிந்திக்கத் தக்கதாகும். பொய்யா விளக்கம் பகைவர்களை அஞ்சி ஒடும்படி செய்துவிடக் கூடிய வல்லமை பொருட் செல்வத்திற்கு உண்டு. கினைத்த செயலினைத் தப்பாமல் முடிக்க வல்லது என்பதைக் குறிக்கவேண்டியே பொய்யா விளக்கம் என்று கூறினார். . - விளக்கத்தினைத் தரக் கூடியவைகள் உலகில் பற் பலவாக அமைந்துள்ளன. அவற்றினின்றும் வேறு படுத்திக் காட்டுகின்ற முறையில் பொருள் என்னும் பொய்யா விளக்கம் என்பதாகக் கூறினார். எண்ணிய தேசத்தில் நினைத்ததையெல்லாம் முடிக்க வல்லது பொருட் செல்வம் என்று கூறிவிட்ட படியால் இருக்கும் தேசத்தில் எல்லாவற்றையும் எளிதாகச் செய்து முடிப்பான் என்பது தெளிவுபடுத்தப் பட்டது. பொருளினால் முடிக்கக் கூடிய செயல்களை எண்ணிப் பார்த்து வரிசைப்படுத்திக் கூறுதல் முடியாததாகும். - & ' ஆதலினால் மிகவும் அருமையான காரியத்தினைச் செய்ய வல்லது பொருள் என்று குறிப்பிட்ட பிறகு ஏனைய காரியங்களை யெல்லாம் எளிமையாகவே செய்து முடிக்க முடியும் என்பதாயிற்று.