உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கையில் பொருளிருப்பதால் தொழில் செய்வதில், வல்ல வர்களைக் கொண்டு தொழிலினைச் செய்துமுடிப்பான். தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை என்று குறட்பா முடிகின்றது. தன் கையிலே பொருள் இருக்கும்படியாக வைத்துக்கொண்டு ஒரு தொழில் லினைச் செய்பவனுடைய செய்கையானது எப்படிப் பட்டதென்றால் ஒருவன் மலைமேல் ஏறி கின்று. யானைகளது போரினைக் காணுவதைப் போன்றது. என்று விளக்கம் தரப்படுகின்றது. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்து ஒன்று-உண்டாகச் செய்வான் வினை.” தொழில் நுணுக்கம் செய்வான் வினை’ என்று கூறியதால் கையில் பொருளினை வைத்துக் கொண்டு செய்பவனது செயல் வெறறியாகவே முடியும் என்று குறிப்பிடப்பட்டது. பூமியில் கின்று போர் புரிகின்ற யானைகளையும். அவை செய்கின்ற போரின்ையும் இனிதாகக் காணுவதற்குக் குன்று உதவியாக கின்றது. 3. இத்தகைய காட்சி ஒன்றினை கம் கண்முன் ஆசிரியர் வள்ளுவர் நிறுத்திக் காட்டினார். பொருளின் அருமையை எடுத்துக் கூற வேண்டிக் காணுதற்கு அருமையான யானைப் போரினைக் காட்டினார். தொழிலினை மேற்கொள்ளுதல் எத்தகைய சிறப். பானது என்ற உண்மை மெய்ப்பிக்கப்பட்டது. - செயலில் இறங்காத மக்கள் அரிய காரியங்களைச் செய்பவர்களாக மாட்ட்ார்கள். தொழிலினை மேற். கொண்டு செய்பவர்களையே இவ்வுலகம் பாராட்டும்.