உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 இத்தனைக்கும் அடிப்படையாக பொருட் செல்வத்தின் அருமை குறிக்கப்பட்டது. குன்றின் மேல் ஏறுதல் என்பது உயர்ந்து போகு தல் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று. உலக வாழ்க்கையில் பொருட் செல்வம் மேலோங்கிச் செல்லும் வழியினை உண்டாக்குவதாகும். குன்றின்மேல் ஏறா தவன் யானைப் போரினைக் காணுதல் முடியாத

தாகும். பொருட் செல்வத்தினைத் தன் கையில் பெற். றிராதவன் அரிய செயலினைச் செய்தல் முடியாது. பொருளும் செயலும் ஒன்றோடொன்று இணைக் திருக்கும் தன்மையினை உடையவைகளாகும். யானைப் போரும் குன்றேறி கிற்பவனும் அக்குன்றும் தொழிலினை மேற்கொண்டவனும் அத்தொழிலில் தன் கையிலுள்ள பொருளும் ஆகிய இவைகளனைத்தையும். ஒன்றுபடுத்தி ஆழ்ந்து, சிந்தித்து உண்மையினை உணர்தல் வேண்டும். கூர்மையான கருவி அதுவேயாகும் பொருள் என்பதனைக் கூர்மையான ஆயுதம்: என்றே ஆசிரியர்குறிக்கின்றார். அதற்கு இணையாக ஆயுதம் வேறு எ து வு ேம இல்லையென்று. கூறுகின்றார். ஆதலினால் ஒருவன் தனக்கு: உயர்வும், பெருமையும், புகழும் ஆகிய இன்னபிறவும்: விரும்பினால் அவன் பொருளினைத் தேடுதல் வேண்டும்.