உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அவ்வாறு சேர்த்த பொருள் அவனுக்குப் பெரும் படையினையும் சிறந்த கட்பினையும் உண்டாக்கிக் கொடுக்கும். பொருள் பெற்றிருப்பவனிடம் நண்பர்கள் பலர் துணையாக வந்து நிற்பார்கள். பகைவர்களே செல்வமுடையவனுக்கு இருக்க முடியாது என்று கூறிவிடலாம். ஏனெனில் பொருட் செல்வம் என்கின்ற கூர்மையான ஆயுதம் பகைமையை பகைவர்களின் செருக்கினை அழித்து ஒழிக்கும். ஆதலால்தான் செருகர் செருக்கறுக்கும் எஃகு என்ப தாகப் பொருட் செல்வத்தினைக் கூறினார். அரிய ஆயுதம் எஃகு என்பது செருகர்’ என்று கூறக் கூடிய பகைவர்களைக் கெடுக்கின்ற.ஆயுதமாகும். செருக்குள்ள பகைவர்களை அடக்குதல் கடினமான தொன்றே :பாகும். பகைவர்கள் எப்பொழுதும் செருக்குடனே இருப்பார்கள். அவர்களின் செருக்கினை அறுப்பது பொருட் செல்வத்தின் வலிமையேயாகும். - இப்பொருட் செல்வம் என்கிற ஆயுதத்தினைவிட கூர்மையானது வேறு எந்த ஆயுதமும் இல்லையென் பதைக் குறிப்பாகவும், சிறப்பாகவும் சுட்டிக் காட்ட வேண்டி அதனின் கூரியது இல்’ • . என்று குறட்பாவினை முடித்தார். - மிகச் சிறந்த படைக்கலம் இப்பொருட் செல்வ மாகும். கூர்மையான ஆயுதம் பகைவர்களை அழிப் பதற்கு மட்டும்தான் பயன்படும் என்பது அல்ல.