உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 எப்பொழுதுமே கூர்மையான ஆயுதம் விரைந்து போயும் தன்மையுடையது. கண்ட மாத்திரத்திலேயே மற்றவர்களுக்கு அச்சத்தினை உண்டாக்குவது. அத்தகைய பற்பல உண்மைகளை வைத்துப் பொருட் செல்வத்தினைக் கணக்கிடுதல் வேண்டும். செய்க பொருளை செருகர் செருக்கறுக்கும்-எஃகு அதனின் கூரியது இல். இக்குறட்பா பொருட் செல்வத்தினைவிட மிகுந்த சக்தி வாய்ந்தது வேறு எதுவுமே இல் அதாவது இல்லை என்ற பொருளில் முடிகின்றது. - * வல்லமை மிகுந்தது - கூர்மையான ஆயுதங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் எல்லா ஆயுதங்களையும்விட கூர்மையான ஆயுதம் பொருட் செல்வமேயாகும். இக்குறட்பாவில் பன்முறையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது செருகர் :செருக்கறுக்கும்’ என்கின்ற குறிப்பே யாகும். இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் பொருளோடு வாழ்தல் வேண்டும் என்கின்ற கருத்தினை உறுதிப் படுத்தவேண்டித்தான் பல துறைகளிலும் பொருட் செல்வத்தினால் ஆற்றப்படும் செ ய ல் க ைள க் கூறினார். - வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டியவன் பொருளினைத் தேடியே வாழ்தல் வேண்டும். அதனால் அறமும் இன்பமும் அவன் பெறுகிறான் என்பது மட்டுமல்ல; அவன் கடமைகள் அனைத்தையும் செய்து முடிக்கத் தகுதி உள்ளவனாகவும் வல்லமையுள்ளவ னாகவும் ஆகின்றான். வாழும் உயிர்கள் அனைத்தும் இன்பத்தை கோக்கியே வாழ்கின்றன. ஆதலால்,