உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 47 உயர்ந்த பிறவியாகிய இங்கே அடையவேண்டிய இன்பங்கள் அனைத்தையும் பொருட் செல்வம் அளிக் கின்றது. பேரின்பத்தை நாடிச் செல்பவர்கள் அருளுடையவர் களாக இருத்தல் வேண்டுமென்பது அறங் கூறும் பேருரையாகும். அருளென்பது எல்லா உயிர்களின் மேலும் அன்பு மிகுதியாகச் செலுத்தப்படுவதாகும். எல்லோரும் அருளுடையவர்களாக இருத்தல் அரிது. ஆசையற்று, துறவறப் பெருமையில் வாழ்பவர்களே அருளாளர்கள் எனப்படுவர். அப்படிப் பட்ட அருளறம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைப்பதும் முடியாததாகும். அருட் செல்வத்தின் அரிய சிறப்பு முயன்று பெறுகின்ற பொருட் செல்வம் எல்லோருக் கும் கிட்டுதல கூடும். அருட் செல்வம் என்பதோ எல்லோருக்கும் அமைந்துவிடும் ஒன்று அன்று. பேரினப உலகம் என்று சிறப்பிக்கப்படுகின்ற அருளின் பத்தில் வாழ்பவர்கள் அரிதாக இருப்பர். தவமுனிவர்களும், அவா அறுத்தவர்களும் மேம்பட்ட ஒழுக்கத்திலே கின்றவர்களும் அருள் பெறுதல் பேரின்ப உலகத்திற்கு அருள் பெறுதலே வாயி லாகும்; வழிகாட்டியாகும். எலலாம் அதுவேயாகும் என்றுங் கூறலாம். அருளில்லாமல் தவமில்லை. அருளிலலாமல துறவு இல்லை. அருளிலலாமல் பேரின்ப உலகமே இல்லை.