உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அருளில்லாதவர்கள் பேரின்ப உலகத்தினை நினைத்தல் கூடாது; கினைத்தாலும் கை கூடாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அருளறத்தை எடுத்துக் கொண்டு பொருட் செல்வத்தினை ஆசிரியர் வள்ளுவனார் விளக்கித் தருகின்றார். அருளாளர் களுக்குப் பொருளோடு கூடிய தொடர்பு எதுவுமே இருக்காது. - - - பொருட் செல்வம் இவ்வுலகிற்கு எத்தகைய சிறப்பான உறுப்பாக அமைந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டியே பொருளினை விளக்குவதற்கு அருளறத்தைச் சுட்டிக் காட்டினார். கடுந் தவத்தினாலும், நிறைந்த ஒழுக்கத்தினாலும் ஒருவன் அருளறக் தேடுதல் வேண்டும். அதுபோலவே இவ்வுலகில், உலகத்தோடு ஒட்டி வாழ்பவர்கள் அரிய முயற்சியினாலும் நிலைத்த உழைப்பினாலும் பொருட். செல்வத்தினைத் தேடுதல் வேண்டும். பொருட் செல்வத்தினைப் பெற்றில்லாதவர்களுக்கு இவ்வுலகத்தில் இடமில்லை என்றே கூறுகின்றார். இவ்வுலக இன்பம் அவர்களுக்குக் கிடையாது என்பது. குறிப்பாகும். . . - . பொருட் செல்வத்தின் இட்த்தினை வேதாந்தச் செல்வமும் கிரப்புதல் முடியாது. அருட் செல்வம் . இல்லாதவர்கள் வேறு செல்வத்தைக் கொண்டும். அருளறத்தினைச் செய்தல் முடியாது. அருள் இல்லாத வர்களுக்குப் பேரின்ப உலகம் இல்லவே இல்லை. என்பதைத் திட்டவட்டமாக ஆசிரியர் உணர்த்து. கின்றார். -