உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.9 பொருளில்லார்க்கு இவ்வுலக இன்பம் இல்லை என்று கூறியதன் குறிப்பு, அவர்களுக்கு என்றென்றும் துன்ப வாழ்க்கையே இருப்பதாகும் என்ற கருத் து வெளிப்படையாகவே கூறப்பட்டது. அருளுலகம் என்றும் பொருளுலகம் என்றும் இரண்டாகப் பிரித்துக் காட்டினார். - -- அந்தந்த இன்பங்களைச் சுட்டி உணர்த்த வேண்டியே இரண்டு வகையான உலகத்தினையும் குறித்துக் காட்டினார். பொருளினால் இவ்வுலகம் ஒரு வ னுக்கு இன்பத்தைக் கொடுக்குமென்றும் அருளினால் அவ்வுலகம் இன்பத்தைக் கொடுக்கும் என்றும் மெய்ப்பித்தார். பேரின்ப உலகு அவ்வுலகம் என்பது பேரின்ப உலகத்தையே பாகும். கால அளவினால் மிகவும் குறுகியதாய், விரைவில் தோன்றி மறைவதாய் நிலையில்லாததாய் இருக்கின்ற அனைத்தையும் சிற்றின்பங்களென்று கூறுவதுண்டு. என்றென்றும் மாறாததாய், நிலைத்து நிற்பதாய், உலக உயிர்களுக்கெல்லாம் பயனுள்ளதாய் இருக்கக்கூடிய இன்பத்தினைப் பேரின் பம் என்றும் கூறினார். . х பிறந்து இருந்து வாழ்கின்ற உலகம் ஆனபடியால் இவ்வுலகம்’ என்று குறிப்பிடப்பட்டது. கடுந்தவம் புரிந்து, அருளறம் பூண்டு மிகமிக அரிதாய்ப் பெறக் கூடியது பேரின்பமானபடியால் அதனை அவ்வுலக மென்றும் கூறி வைத்தார். . வ.-10