உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 கன்கு அறிவுறுத்துகின்றார். ஈகை செய்தலுக்கு அளவுண்டு என்கின்ற் உண்மை கூறப்பட்டது. பொருள்தனைப் போற்றி வாழ் என்றகருத்தினை இக் குறட்பா கொடுத்துக் கொண்டிருக்கிறது. அள வில்லாதவன் வாழ்க்கை தவறாக முடியும் என்பது உலகறிந்த உண்மையாகும். - சொற்களினை அரிதாக அளவிட்டுக் கூறும் ஆசிரியர் பொருள் போற்றி வழங்க வேண்டும் என்று கூறியதால் தன்னுடைய பொருள் அழியாமல் காத்துக் கொள்ளப்படும் என்ற உண்மையும் புலப்படுத்தப் பட்டது. - - பொருள் வருவாய் அதிகமாக இல்லையே என்று கவலையுறுதல் பொருத்தமானது அன்று. பொருள் வருவாய் காலத்தினால் பெருகிக் கொண்டு போதல் இயற்கையின் வழிமுறையாகும். அப்படியே பொருள் வருகின்ற வழி சிறிதாக இருந்தாலும் ஒருவனுக்குக் கெடுதி வந்து விடாது. - - வழிகள் ஆனால் அவன் உன்னிப்பாகக் கவனிக்க வேண் டியது பொருள் போகின்ற வழியேயாகும். தன் கையி லிருந்து பொருள் போகின்ற் வழி விரிந்து கொண்டே போனால் அவன் கேடுறுதல் உறுதியேயாகும். உலக இயல்பில் பொருள் வருகின்ற வழி பெரிதாக இல் லையே என்றுதான் பலரும் எண்ணுவது உண்டு.