உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பொருள் வருகின்ற வழி சிறிதுதான் என் றாலும் அவ்வழி சிறிதாகி விட்டபடியால் தீங்கு கேரிடும் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவும் கூடாது. பொருள் வருகின்ற வழி சிறுகச் சிறுகப் பெரிதாகும். ஆனால் போகின்ற வழியோ பெரிதாகிக் கொண்டு போகக் கூடாது. பொருள் போகின்ற வழி அதாவது செலவு செய்யும் வழி அகலமாகி விட்டால் துன்ப.ே நேரிடும். . ஆகு ஆறு போகு ஆறு ". அதனால் பொருள் போகின்ற வழி விரியாம லிருக்கப் பார்த்துக் கொண்டால், சிறிதான வழியில் பொருள் வந்தாலும் ஒருவனுக்குத் தீங்கு கேரிடாது. ஆகு ஆறு போகு ஆறு என்ற இரண்டினைப் பிரித்துக் காட்டிப் பொருட் செல்வத்தினை ஆசிரியர் பேசுகின்றார். பொருள் வருகின்ற வழியினை ஆகு ஆறு என்றும் பொருள் போகின்ற வழியினைப் போகு ஆறு என்றும் ஆசிரியர் குறிப்பால் உணர்த்து கின்றார். - போகு ஆறு எக்காலத்திலும் அகலாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். போகு ஆறு அகலாக் கடை என்று குறட்பா சொல்லுகின்றது. அளவு இட்டிது ஆயினும் கேடில்லை என்று கூறுகின்ற பேருண்மை சிந்திக்கத் தக்கதாகும். . இட்டிது என்பதற்குச் சிறிது என்று பொரு ளாகும். ஒருவனுக்குக் கெடுதி வந்துவிடுமேயானால் அதற்குக் காரணம் அவனுக்குப் பொருள் வருகின்ற