உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - படுகின்ற பொருள் போற்றப்பட வேண்டும் என்பதனை கன்கு தெளிய வைத்தார். அளவறிந்து வாழ்தலே வாழ்க்கை வருவாய் உள்ளவரும் கெட்டுவிடுவதற்குக் காரணம் எதுவாக இருக்க முடியுமென்பதனையும் எளிமையாக விளக்கிக் கூறினார். அளவறிந்து வாழாதவன் வாழ்க்கைக் கெட்டுவிடும் என்பது: தெளிவாகக் கூறப்பட்டதென்றாலும் அவ்வாறு கெட்டுவிடுகின்ற முறைகளையும் ஆசிரியர் வெளிப் படுத்துகின்றார். அ ப் படி ப் பட்ட வ னி ன் வாழ்க்கை சிறிது. காலத்துக்கு கடந்து வருவதுபோலவே தோன்றும். பிறகு அவ்வாழ்க்கை இல்லாமலே போய்விடும். அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை கெட்டுப்போகின்ற, தன்மை தொடக்கத்தில் தெரியாது. கெடுதியில்லாதது போலவே தோன்றும். உளபோல’ என்ற சொல்லினை ஆசிரியர் கூறுகின்றார். பார்ப்பதற்கு அவ்வாழ்க்கை இருப்பது போலவே தோன்றுமாம். ஆனால் உண்மையில் அவ்வாழ்க்கை. இல்லாததாகவே ஆகிவிடும். தோற்றத்தில் வாழ்க்கை கடப்பதுபோல இருக்கும். காலம் செல்லச் செல்ல அப்படிப்பட்ட தோற்றமும் இல்லாமல் கெட்டு அழியும். என்பதாகும். * . . . . . - தோன்றும் தோற்றம் அளவறிந்து வாழாதவனுடைய நிலைமை கெடுதி. யுறும் என்பது திண்ணம். கு ற ட் பா வின்