உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 9 தொடக்கத்திலேயே அளவறிந்து வாழாதான்' ೯ಕಣಣ • . ஆசிரியர் கூறுகின்றார். - வாழ்தல் என்பது ஈதலும் நுகர்தலும் ஆகும். அளவு கடந்து செல்லுமேயானால் வாழ்க்கை கெடுதி யுறும். வருகின்ற கெடுதி உடனுக்குடனே அறிந்து கொள்ள முடியாததானபடியால், வாழ்க்கை உள்ளது போலவே காட்டி உண்மையில் இல்லாததாகத் தோன்றிப் பிறகு அத்தோற்றமும் மறைந்துவிடும். வாழ்க என்றும் பொருளிட்டி வாழ்க என்றும் கூறுகின்ற ஆசிரியர் அளவறிந்து வாழ்க என்பதை மிகவும் வற்புறுத்தி வைத்தார். அளவறிந்து வாழா ! தான் வாழ்க்கை உளபோல-இல்லாகித் தோன்றாக் கெடும். தோன்றாக்கெடும் என்று முடித்து வைத்ததனால் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என்பது குறிப்பாயிற்று. - : . - உலகில் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்பது அன்று, அளவோடுதான் வாழ்தல் வேண்டும். அளவில் லாமல் வாழ்வது பொருளில்ல்ாத நிலைமையினை உண்டாக்கிவிடும். தொடக்கத்திலேயே செலவினங். களைச் சுருக்கிக்கொள்ளுதல் வேண்டும். - பாதுகாத்தல் ஏனென்றால் கெடுதி வருவது தொடக்கத்தில் தெரியாது என்று கூறுகின்றார். வாழ்க்கை கடந்து. வருவது போலவே தோன்றுமாதலால் கெடுதிக்கு, ஆளாக்கப்படுபவனும் அ த ைன உணராதவன் ஆகிவிடுகின்றான். . •