உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வாழ்ந்து வருகின்ற வாழ்க்கை திடும் என்று மறைந்துவிடாது என்றும் கூறுகின்றார். அளவு என்று கூறப்படுவதால் வருவாயின் செலவு செய்யப் படும் அளவும் குறிப்பிடப்பட்டது. - பொருட் செல்வத்தினுடைய சிறப்பான தன்மை யினைக் குறிக்கும்பொருட்டே அதனை மிகவும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வற்புறுத்தவே இவ்வாறு அளவிட்டுக் கூறினார். கிலைபெற்று இருக்கக் கூடிய வாழ்க்கையினையே விரும்புதல் வேண்டும். கெட்டு மறைகின்ற வாழ்க்கை அ றி வு டை ைம க் குப் பொருத்தமாகாது. வாழ்க்கையினை நிலை கிறுத்தச் செய்வதும் பொருட் செல்வம் என்பதேயாகும். - - பொருட் செல்வத்தினுடைய இன்றியமையாத் தன்மையினையும் அதனைக் காப்பாற்ற வேண்டிய அருமையான வழிமுறைகளையும் கூறியதனால் , பொருளைக் கொண்டு பொருள் படைத்தவன் செய்ய வேண்டிய அறமான செய்கைகளையெல்லாம் வெறுத்து நீக்கி ஈகை என்பதையே மறந்து மனிதத் தன்மைக்குப் புறம்பாக வாழ வேண்டும் என்பது அன்று. பொருட் செல்வத்தினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது அறிவுடையோர் செயலாகும். - . . .

  1. 65 செய்யாமல் இருத்தலே கூடாது

பொருளினைக் காப்பாற்றுவதாக கினைத்து உலோபியாக் வாழுதல் மனிதப் பிறவிக்கு