உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 1 இலக்கணமாகாது. பொருளைக் காப்பாற்றுவது என்பது ஈகைத்தன்மையினையும் அறச்செயல்களையும் நீக்கிவிடுவது என்பதாகாது. பொருள் படைத்தவன் ஈதலைச் செய்யாமல் இருப்பானேயானால் அவன் எடுத்த மானிடப் பிறவியே இழிபிறவியாகக் கருதப்படும். - - - உலகமே பொருளினால்தான் நடைபெறுவதாகும்" என்று கூறிக்கொண்டு யாருக்குமே எவ்வித ஈதலையும் செய்யாது வாழ்பவன் மயக்கமுள்ள தாழ்ந்த பிறப்பினன் என்றே கருதுதல் வேண்டும். பொருள் படைத்தவன் உலோபி என்ற பெயருக்கு ஆளாகக் கூடாது, எல்லாம் என்ற ஒரு சொல்லினை கருத்தாழத்துடன் குறட்பாவில் அமைத்துக் காட்டு கின்றார். இம்மை என்றும், மறுமை என்றும் பேசப். படுகின்ற எல்லாவற்றுக்கும் பொருள்தான் காரணம் என்று கூறிக்கொண்டு பிறருக்கு எந்தவிதமான ஈகை' யும் செய்யாதிருப்பவர்கள் உண்டு. - அப்படிப்பட்டவர்களை மருளான்” என்று: ஆசிரியர் அழைக்கின்றார். அப்படிப்பட்டவன் அறிவில்லாத் தன்மை என்கிற மயக்கத்தை உடையவன் என்பதே பொருளாகும். அவனை மாணாப் பிறப்பு என்றும் கூறுகின்றார். அதாவது, மனிதத் தன்மை என்பதைப் பெற்றிராத பிறவி என்பதாகும். . . . - தாழ்ந்த பிறவி - தான் பொருட் செல்வத்தைப் பெற்றிருந்தும், வறியவர்களுக்கு அதனைக் கொடுக்க வேண்டும்.