உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 களுக்கு அளிப்பதாகும். அந்த ஈதலினைச் செய்யாதவன் கமானாப் பிறப்பு உடையவனாகின்றான். ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு என்று சொல்லி, குறட்பர முடிகின்றது. மனிதப் பிறவிக்கு இருக்க வேண்டிய சிறப்பான இயல்பான பண்புகள் என்பன உண்டு. அத்தனைப் பண்புகளையும் பெற்றிருந்தான் ஒருவன், தன்னை மனிதப் பிறவி எடுத்தவன் என்று கூறிக்கொள்ளும் உரிமையினைப் பெறுபவன் ஆகின்றான். அவைகளில்லாவிட்டால் ஏனைய கீழான பிறவி களுக்கே அவன் ஒப்பாகின்றான். பொருட்செல்வம் என்பது ஒருவனுக்கு மட்டும் இன்பம் தருவது அல்ல. பொருளினைப் பெற்றிருப்பவன் பலர்முன் அச் செல்வத்தினால் இன்பம் அடைதலைக் கண்டு தானும் மகிழ்ச்சி அடைதல் வேண்டும். அந்த மகிழ்ச்சியினைப் பொருட்செல்வத்தினை வைத்திருந்தும் அடையாதவன் மாணாப் பிறப்பு பெற்றவனாகின்றான். மாணாப் பிறவி என்பதனை கிறைவு பெறாத பிறவி என்று கூறுவர். பொருள் சம்பாதிப்பதற்கு முன்பாக அவன் வைத்திருந்த எண்ணமும் அறிவும் இருந்தபடி பொருளினைப் பெற்ற பிறகு அவனுக்கு இல்லாமல் போய் விட்டபடியால் அவனை மருளானாம் மாணாப் பிறவி என்று குறிப்பிட்டார். - சிறந்த முறையில் திட்ப நுட்பம் கிறைந்து குறட்பா அமைந்துள்ளது. பொருளானாம் எல்லாம் என்று ஈபாது இவறும்- மருளானாம் மாணாப் பிறப்பு.’ -