உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - இக்குறட்பாவில் ஆசிரியர் பிறப்பு என்று குறித்துக் காட்டியதன் சிறப்பை கன்கு உணர்தல் வேண்டும். பிறப்பிற்கு ஏற்றவாறு ஒருவன் கடந்து கொள்ளவில்லை யென்றால் பின்னர் அப்பிறவி அவனுக்கு எப்பயனையும் தராது. - மானிடப் பிறவி மற்ற பிறவிகளை விடச் சிறந்த தென்பதற்குப் பல காரணங்களைக் காட்டினாலும் தனிச்சிறப்பு என்பது ஈகைத் தன்மையேயாகும். இந்த ஈகைத் தன்மையினை மனிதப் பிறவி எடுத்த எல்லோருமே பெற்றிருக்க வேண்டும் என்பது அறமே யானாலும் செல்வமுடையவர்கள் அதனை முதன்மை யாக வைத்து வாழ்தல் வேண்டும். ஏனெனில் செல்வம் பெற்றிருப்பதன் பயன் ஈகைத் தன்மையைப் போற்றிக் காப்பாற்றுவதேயாகும். செல்வத்தினால் தான் பலவற்றினை நுகர்ந்து இன்பத்தினை அடைதல் வேண்டும். அதே போல ஈகைத் தன்மையினாலும் அவன் இன்பத்தினை அனுபவித்தல் வேண்டும். இந்த இரண்டு செயல் களினையும் செய்யும் ஆற்றலுக்கு ஆக்கமளிப்பது பொருட் செல்வமேயாகும். - - பொருள் ஈட்டுவதற்கு முன்பு நல்லறிவும் ஈட்டிய பின் புல்லறிவும் பெற்றுவிடுகின்றான் என்றால் அவன் அறிவில்லாத மருளான்” என்றே கூறப்பட வேண்டிய வனாகிறான். - - - நல்லறிவு என்று கூறியதால் பொருட் செல்வத்தினை நல்லன எல்லாவற்றிற்கும் பயன் படுத்த வேண்டும் என்று கருதியதேயாகும்.