உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 பொருளினால் எல்லாம் முடியும் என்று எண்ணிய எண்னத்தில் முதன்மையான ஈகைத்தன்மையும் சேர்ந்ததேயாகும். - பொருளால் பெற வேண்டிய பெரும் பயன் பொருளிட்டிய பலர் தாங்கள் கூட அச் செல்வத்தினால் வரும் இன்பத்தினை அடையாதபடி இருக்கிறார்கள். கொடுத்தலும் தான் அனுபவித்த லும் ஆகிய இரண்டும் பொருட் செல்வத்தின் பயன் என்று பொதுப்படக் கூறுதல் வேண்டும். இந்த இரண்டும் பொருட் செல்வத்தின் பயன் என்பதை அறியாதவர்கள் ஒன்றும் இல்லாதவர்களேயாகின் றார்கள். r . இயற்கையின் துணையினாலும் முயற்சியின் பயனாலும் கோடிக் கணக்கில் பொருட்செல்வத்தினைப் பெற்றிருப்பவர்களும் உண்டு. பற்பலர் கோடிக் கணக்கில் பொருட் செல்வம் அடைதலும் உண்டு. இதனை ஆசிரியர், அடுக்கிய கோடி’ என்று கூறுகின்றார். - Y. அத்தகைய பெருஞ் செல்வம் பெற்றிருந்தும் ஒன்றுமே செய்யாதவனாக ஆகிவிட்டபடியால் அவனை ஒன்றுமே இல்லாதவன் என்று கூறுதலும் பொருந்தும். அவன் பெற்றி செல்வத்தினால் பயனே இல்லை என்று கூறுகிறார். அவன், செல்வம் பெற்றிருந்தும் செல்வம் .ெ ப ற | த வ ணு க் கு ச் சமமாகின்றான். * . . . . . § . வ.-11