உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இரு செயல்கள் கொடுப்பது என்பதும் துய்ப்பது என்பதும் செல்வத்தினால் நடைபெற வேண்டிய இரண்டு அரிய செயல்களாகும். துய்ப்பது என்பது செல்வத்தின் பயனைத் தான் அனுபவிப்பதாகும். t கொடுப்பது என்பது வறியவர்களுக்கு ஈதல் ஆகும். கொடுப்பதனால் வருகின்ற இன்பம், கிலை பெற்ற சிறந்த இன்பம் ஆனபடியால் கொடுப்பது என்பதைக் கூறிக் குறட்பாவினைத் தொடங்கினார். கொடுப்பது என்பது பலரும் அனுபவிக்கின்ற இன்பமாகும்; மிகச் சிறந்த பயனுமாகும். தான் துய்ப்பது என்பது தனக்கு மட்டும் பெற்றுக் கொள்ளுகின்ற இன்பமாகும். இந்த இரண்டும் சிறந்த பயன்களாகக் கூறப்படுகின்றன. இந்த இரண்டினையும் 'செய்யாதவன் பெற்றிருக்கின்ற செல்வம் பயனுடைய 'செல்வமாகாது. - அது பயனில்லாததேயாகும். இந்த இரண்டு பயனையும் அவன் இழந்தவனாகின்றான். கோடிக் கணக்கில் செல்வமிருந்தும் ஒன்றுமே பயனில்லை 'யென்று கூறி முடிக்கின்றார். கொடுப்பது உம் துய்ப் தூஉம் இல்லார்க்கு அடுக்கிய-கோடி உண்டா யினும் இல். மனிதப் பிறவி எடுத்தும் பயனில்லா தவர்களாக வாழ்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். -