உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அதனைத் தக்க முறையில் பயன் படுத்துதலே அறிவு டைமையாகும், மனிதப் பிறவிக்கு உரிய அரிய பண்பு களில் அன்பு என்பது தலையாய ஒன்றாகும். அன்பு வாழ்க்கையே உயிர் வாழ்க்கை அந்த அன்பு இல்லாதவன் எலும்பின்மேல் போர்த். தப்பட்ட வெறும் உடம்பினைப் பெற்றவன் என்று கூறப்பட்டது. அன்பில்லாதவன் பயனற்ற மிக இழி வான பிறவியைப் பெற்றவனாகிறான். அன்பு இல்லா தவன் மனிதத் தன்மையுடன் கடந்து கொள்ள மாட்டான். அன்பில்லாதவன் தனக்கும் மற்றவர்களுக் கும் பயன்படாதவனாகின்றான். தனக்குத் துன்பத்தினை உண்டாக்கிக் கொள்ளு. வான்; தன்னையே வருத்திக்கொள்ளுபவனாகின்றான் என்றும் கூறப்பட்டது. பொருள் பெற்றவன் அன்பு, பெறாமல் இருப்பானேயானால் அவன் அப்பொருளி னால் துன்பமே அடைகிறான் என்பது குறிப்பாகும். துன்பப்பட்டுப் பொருளினைச் சேர்த்தவன் ஆனபடி யால் துன்பப்பட்டவனாகின்றான். அறத்தின் தன்மையினை அறிந்து பொருளினைக் கொண்டு அறத்தோடு வாழாதவன் துன்பமே அடைவான். அன்பு பெற்று வாழ வேண்டியவன் அன்பினை நீக்கி வாழுகின்றான். அன்பு செய்வதை நீக்கியவனாகி விட்டால் அவன் மற்றவர்களுக்கு ஈதலே செய்யமாட்டான். - அன்பு ஒரீஇ என்று அமைத்துக் குறட்பா விளக்கம் தருகின்றது. கொடுக்காமல் இருக்கவேண்டும்.