உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அறம் நோக்கான் - 'அறம் என்பதை கினைக்காதவன் வாழ்வதும் வாழாததும் ஒன்றேயாகும். வறியவர்களுக்கு ஈதல் வேண்டும் என்கின்ற பண்பாடு அறத்தினுள் அடங் கியதாகும். - பெருஞ் செல்வத்தைச் சம்பாதித்த ஒருவன் அன்பும் இல்லாமல் தானும் அனுபவிக்காமல் ஈகையும் செய்யாமல் இருப்பானேயானால் அவனுடைய செல் வத்தை மற்றவர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. . அவனுடைய தன்மையும் அவன் வாழ்க்கையும் அவன் பெற்ற செல்வத்தை மற்றவர்களே கொண்டு போகும்படி ஆக்கிவிடும் என்பதாயிற்று. அன்பு ஒரிஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய-ஒண்பொருள் கொள்வார் பிறர்.” - பொருட் செல்வம் புகழ் வாய்ந்தது என்பதை ஒண் பொருள் என்பது குறித்துக் காட்டிற்று. பொருள் புகழுடையது என்று சொல்கின்ற பொழுது அதனைப் பெற்றிருப்பவன் கிறைந்த புகழினைத் தேடிக் கொள்ளுதற்குக் கடமைப்பட்ட்வனாகிறான். ஆனால் மனிதர்களுக்கே ஒவ்வாத தீமையான குணங்களைச் செல்வந்தன். ஒருவன் பெற்றிருந்தால் அவன் பெற்றிருக்கும் பொருளினை அவனுடன் யாதொரு தொடர்புமே இல்லாதவர்கள் கொண்டு செல் வார்கள் என்பதனைப் பிறர் என்ற சொல் குறித்துக் காட்டிற்று. - -