உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175. ஆதலால் மக்கள் கூட்டத்தில் மக்கள் என்று: கருதப்பட வேண்டியவர்கள் யாவர் என்பதும் மாக்களாக ஒதுக்கப்பட வேண்டியவர்கள் யாவர். என்பதும் புலனாயிற்று. இரப்பவர்களுக்குக் கொடுக் கும் தன்மை மக்கள் கூட்டத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்பாகும். - அளவுகோல் அதுவே மக்களையும் மாக்களையும் வேறுபடுத்திக் காட்டும் அளவு கோலாகும். ஆதலால்தான் ஈகைத் தன்மையினை முன் வைத்துக் கயவர்களின் கீழான மனநிலையினை ஆசிரியர் எடுத்துக் காட்டினார். . கல்லவர்களிடத்தில் இருக்கக்கூடிய செல்வம் காட்டுக்குப் பயன்படும். கீழான தன்மை கிறைந்த கயவர்களிடத்தில் இருக்கும் செல்வம் யாதொரு. பயனையும் தராது. கயவர்களின் கொடிய மனத்தினை மிக மிகத் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டிய, விதிரார்' என்ற சொல்லினைக் குறட்பாவில் அமைத்தார். - - அடித்து நொறுக்கப்பட்டுக் கொடிய துன்பத்திற்கு ஆளாக்கப்படும் வரையிலும் கயவர்களுக்கு நற்செயல் புரியும் காட்டமே வராது என்பதாகும். நற்பணிகளைச் செய்ய வேண்டி எடுத்துச் சொல்லுவோமேயானால அப்படிப்பட்ட சொற்கள் கயவர்களைத் திருத்தாது. என்பதாகும். - . . -