உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 சொல்லப் பயன்படும் சான்றோர் வாயளவிலே வார்த்தைகளினால் சொன்னாலும் பயன் 5تي T35 للاواسمتن மக்களே சான்றோர்கள் எனப்படுவார்கள். அவர்களே மனிதத் தன்மை கிறைந்த பெருந்தன்மையாளர்கள் என்றும் குறிக்கப் படுவர். மனிதப் பிறப்பில் இருக்க வேண்டிய கற்பண்புகள் அனைத்தும் கிறைந்திருப்பவர்கள் சான்றோர்கள் எனக் கூறப்படுவர். சான்றோர்கள் இருப்பதினாலேதான் இவ்வுலகம் கின்று கிலைத்து கடந்தேறி வருகின்றது. சான்றோர்களே மேன்மக்கள் என்று கூறப்படும் தகுதிக்கு உரியவர்களாவார்கள். கரும்பிலிருந்து சாற்றினை எடுப்பதற்கு அக் கரும்பினை மிகவும் வன்மையாகப் பிழிதல் வேண்டும். மிகக்கொடுமை செய்கின்ற கள்வர்கள் போன்றவர்களே கயவர்களிடமிருக்கும் செல்வத்தினைக் கொண்டு செல்ல முடியும். சொல்லப் பயன்படுவர் சான்றோர்: என்று குறட்பா தொடங்கப் பெறுகின்றது. சொன்ன மாத்திரத்திலேயே தங்களால் இயன்ற வரை மற்றவர்களுக்குப் பயன் படுகின்றவர்களே சான்றோர்கள் எனப்படுவர். கரும்பினைக் கசக்குவது போல் கொல்லும் தன்மையில் வைத்த பிறகே பயன்படுவார்கள் கீழ்மக்களாகிய கயவர்களாவார்கள். இக்கருத்தின்ைச் சொல்லப் பயன் படுவர் சான்றோர், கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்' என்ற எளிய குறட்பா விளக்கிக் காட்டுகின்றது. இக்