உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 குறட்பாவில் பிறருக்குப் பயன்படுதல் வேண்டும் என்ற உண்மையினை வலியுறுத்திக் காட்டினார். பயன் படுவர் என்றும் பயன்படும் என்றும் கூறப்பட்ட குறிப்புகள் சிந்திக்கத்தக்கனவாகும். அழுக்காறு ஆறறிவு படைத்த மக்கட் பிறவியினைப் பெற்றி. ருந்தும் கயவர்கள் கீழ்மக்களானபடியால் பகுத்தறி வற்ற விலங்கினங்களாகவே கருதப்படுவர்ர்கள். சொல் லினால் பயன்படுவோர்கள் சான்றோர்களாவார்கள். பயன்படுவார்கள் என்று குறிப்பிட்டதால், தங்களால் இயன்றவரை கொடுப்பார்கள் என்பதே யாகும். பிறப்பும் தோற்றமும் மக்கட் பிறவி என்று கூறு. வதற்குப் போதாது. மனிதப் பண்பாடே இருக்க வேண். டியதாகும். கீழ்மக்களாகிய கயவர்களைக் கண்டு. கொள்ள வேண்டிய வழிமுறை கூறப்பட்டது. கயவர்களிடம் இருக்கும் பொருள் கள்வர் முதலிய வர்களால் வலியக் கொண்டு செல்லப்படும் என்கின்ற குறிப்பினைக் கொல்ல என்று சுட்டிக் காட்டினார். கயவர்களிடம் காணப்படுகின்ற இழிவான குணங் . கள் எண்ணிறந்தவைகளாகும். கொடிய தீய குணங். களில் அழுக்காறு என்று கூறப்படுகின்ற பொறாமை குணமும் ஒன்றாகும். பொறாமையுள்ளவர்கள் எப். பொழுதும் மற்றவர்களைக் குற்றம் சொல்லிக் கொண் டிருப்பார்கள். -