உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 73 யாதொரு குற்றமும் பிறர்மீது இல்லையென் றாலும் அவைகளைக் கற்பனை செய்து பிறர்மீது கூறிப் பழி சுமத்தும் பழக்கம் கயவர்களிடம் உண்டு. கீழ்மக்களின் இழிவான தன்மைகள் மற்றவர்கள் நன்றாக வாழ்வதையே கயவர்கள் விரும்பமாட்டார்கள். அழுக்காறு என்கின்ற பொறா மைக் குணம் கயவரிடத்தில்முழுமையாக எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் நன்றாக உடை உடுத்திக் கொண்டு போனாலும் அதைக் கண்டு கய வர்கள் பொறாமைப் படுவார்கள். - பிறர் வயிறார உண்டு வாழ்வதையும் கண்டு கய வர்கள் அழுக்காறு கொள்வார்கள். கீழ் மக்களாகிய கய வர்களிடத்தில் இத்தகைய இழித்தன்மைகள் கிறைக் திருக்கும். இழிவான தன்மைகளில் முதன்மை யாக வைத்துப் பேசப்படுவதை அழுக்காறு என்றும் சொல்லலாம். - அவ்வளவு மிகக் கொடிய தீமையான குணம் அழுக்காறே யாகும். மற்றவர்கள் கன்றாக உடுத்தியும் உண்டும் இருப்பதைக் கயவர்கள் பார்த்தால், அப்படிப் பட்டவர்கள்மீது இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து கயவர்கள் பேசுவார்கள். • அவ்வாறே குற்றமே இல்லாதவர்கள் மீதும் குற்றங்கள் இருப்பது போல உண்டாக்கிப் பேசுவதில் கயவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள் என்று