உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 அவர்களை இப்பூமிக்கு பாரம்’ என்றே கூற வேண்டும். பொருள் சம்பாதிப்பதை விரும்ப வேண்டியது மக்களின் நற்பண்பேயாகும். ஈட்டிய பொருளினைத் தக்க முறையில் பயன்படுத்தாவிட்டால் அப்பொருள் பயனற்றதாகி விடுகின்றது. அவ்வாறு பயனற்றதாகச் செய்யும் பொருளாளனும் பயனற்றவ னோகவே ஆகிவிடுகின்றான். * இசை ക്ഷേങ്ങ, வாழ்தலே மனித வாழ்க்கை - மக்கள் விரும்பித் தேடிக் கொள்ள வேண்டியது இசை யெனப்படும் புகழேயாகும். இப்புகழினை அனைவரும் கல்ல முறையில் அடைதல் வேண்டும். அப்புகழினைப் பெறுவதற்கு விருப்பம் கொள்ளுதலும் வேண்டும். அவ்வாறு விருப்பங் கொள்ளாத மக்கள் மக்களாகவே கருதப்படக் கூடாதவர்கள் ஆவார்கள். கஇசை வேண்டா ஆடவர் என்று சுட்டிக் காட்டிக் குறட்பா அமைக்கின்றார். இவ்வாறு, புகழினை விரும்பாத மக்கள் பூமியில் வாழ்வதே பாரமாகும். தோற்றம் கிலக்குப் பொறை" என்று குறட்பா முடிகின்றது. அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதே குற்றமாகும் என்கின்ற குறிப்பில் தோற்றம் என்பது குறிப்பிடப்பட்டது. ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்-தோற்றம் நிலக்குப் பொறை’. இக்குறட்பாவினால் பொருள் சம்பாதிப்பதை மட்டும் விரும்பிப் புகழ் சம்பாதிப்பதை விரும்பாத மக்களின் குறைபாடு தெள்ளத்தெளிய விளக்கப்